ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
நோக்கங்கள்

  • உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்பது நபிமொழி.
  • நபிமார்கள் எந்தெந்தக் காலங்களில் வாழ்ந்தார்களோ அந்தந்தக் கால மக்களில் தலைசிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். அதேபோன்று உள்ளம் பரிசுத்தமானவர்களாக விளங்கினார்கள்.
  • நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களும் நபிமார்களைப் போன்றே அறிவில் தலைசிறந்தவர்களாக - உள்ளம் தெளிவானவர்களாக இருக்கவேண்டும்.
  • மார்க்க அறிஞர்கள் மார்க்க அறிவில் முழுமை பெறுவதோடு உலகக் கல்வியிலும் நிறைவுபெற உலகக் கல்வி பயில வேண்டும்.
  • உள்ளம் தெளிவு பெற்று ஒளிவு பெற ஆன்மிக ஞானக் கல்வியய் கற்க வேண்டும்.
  • உலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சாந்தி சமாதான நிலவ, சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயம் மதநல்லிணக்கத்திற்காக பாடுபடும் உலமாக்களை (அறிஞர்களை) உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கங்களையும் முன்வைத்து இந்தக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு இறையருளால் நடைபெற்று வருகிறது. அத்தோடு தொழிற்கல்வி, கணினி அறிவு போதிக்கப்படுகிறது. இன்னும் பல திறப்பட்ட அறிவுகள் கற்பிக்கப்படஉள்ளன.
  • எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் இந்தக் கல்வி நிறுவனம் இஸ்லாமியக் கலைகள் அனைத்தையும் ஒருங்கே அளிக்கும் பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்பது, இதன் நிறுவனர் நபிகளாரின் பேரர், குத்புஸ்ஸமான்ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா அவர்களின் இலட்சியக்கனவு. அந்த உயர்ந்த இலட்சியக் கனவை உருவாக்கும் பணியில் நாம் உறுதுணையாக இருக்க உறுதிபூணுவோம்.